வேட்பாளர் அறிவோம் - கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்

தற்போது தமிழகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக தேசிய தலைவர் ராகுல் காந்தியால் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் அறிவோம் - கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்
வசந்தகுமார்
  • News18
  • Last Updated: March 29, 2019, 8:57 PM IST
  • Share this:
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை வேட்பாளராக வசந்தகுமாரை முன்னிறுத்தியுள்ளது.

தமிழகத்தின் முன்னணி தொழிலதிபராக உள்ளவர் வசந்தகுமார். வசந்த அண்ட் கோ மற்றும் வசந்த டிவி-யின் உரிமையாளராக உள்ளார். நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் உள்ள வசந்தகுமார் 2006 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் வசந்தகுமார் தமிழகக் காங்கிரஸ் துணைத் தலைவராகவும் வர்த்தக சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தமிழகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக தேசிய தலைவர் ராகுல் காந்தியால் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் பார்க்க: கன்னியாகுமரி தொகுதி ஒரு சிறப்புப் பார்வை
First published: March 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்