வேட்பாளர் அறிவோம்- தனுஷ் எம். குமார் (தென்காசி தி.மு.க.)

முன்னாள் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமார்.

வேட்பாளர் அறிவோம்- தனுஷ் எம். குமார் (தென்காசி தி.மு.க.)
தனுஷ் எம்.குமார்
  • News18
  • Last Updated: March 25, 2019, 2:06 PM IST
  • Share this:
தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து தி.மு.க வேட்பாளராகக் களம் இறங்குகிறார் தனுஷ் எம்.குமார்.

முன்னாள் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமார். தனுஷ்கோடி எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக-வின் தீவிர விசுவாசியாக இருந்தவர். 1977-ம் ஆண்டு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றவர். அதன் பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உடன் இணைந்து திமுக-வில் இணைந்தார்.

இவரது மகனும் தென்காசி தொகுதியில் திமுக மக்களவை வேட்பாளருமான தனுஷ் எம்.குமார் பி.இ.,எம்.பி.ஏ., எல்.எல்.பி., படித்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் இறங்கிப் பயணித்து வரும் தனுஷ் எம்.குமார் தற்போது விருதுநகர் தெற்கு திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.


தென்காசி தொகுதியில் திமுக இதுவரையில் வெற்றி பெறாத சூழலில் திமுக அரசியல் வாரிசான தனுஷ் எம்.குமார் இம்முறை மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராகக் கட்சியின் தலைமையால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும் பார்க்க: கருணாநிதியின் ஆளுமை ஸ்டாலினிடம் உள்ளது- தயாநிதிமாறன்
First published: March 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்