வேட்பாளர் அறிவோம் - தமிழிசை செளந்தரராஜன் (தூத்துக்குடி - பா.ஜ.க)

முன்னதாக சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள தமிழிசை பல மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

வேட்பாளர் அறிவோம் - தமிழிசை செளந்தரராஜன் (தூத்துக்குடி - பா.ஜ.க)
தமிழிசை செளந்தரராஜன்
  • News18
  • Last Updated: March 23, 2019, 6:05 PM IST
  • Share this:
தமிழிசை செளந்தரராஜன் அ.தி.முக. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழிசை செளந்தரராஜன் தமிழக பா.ஜ.க தலைவராக உள்ளார். முன்னதாக அவர் பாஜக-வின் தேசிய செயலாளராகப் பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவரான குமரி ஆனந்தனின் மகளான தமிழிசை சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்துள்ளார்.

கூடுதலாக மகப்பேறியல் மற்றும் மயக்கவியல் துறையில் சிறப்புப் படிப்பும் கனடாவில் சோனாலஜி சிறப்புப் பயிற்சிப் பெற்றுள்ளார். முன்னதாக சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள தமிழிசை பல மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.


காங்கிரஸ் அரசியல் பின்னணியைச் சேர்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் பாஜக-வில் இணைந்துப் பணியாற்றி வருகிறார் தமிழிசை. இதுவரையில் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் ஒரு மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ள தமிழிசை, அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.

மேலும் பார்க்க: தேர்தல் 40/40: தூத்துக்குடி தொகுதி ஒரு சிறப்பு பார்வை
First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்