வாக்கு எண்ணிக்கையின்போது திமுக ஆட்சிக்கு வருவதை மோடி தடுத்தார்: மு.க. ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கையின்போது திமுக ஆட்சிக்கு வருவதை மோடி தடுத்தார்: மு.க. ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
  • Share this:
2016 சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதி மட்டுமின்றி, 15 தொகுதிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு அதிமுக வெற்றிபெற்றதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

அமமுகவில் இருந்து விலகிய புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், தனது ஆதரவாளர்கள் மூன்றாயிரம் பேருடன், திமுகவில் இணைந்தார்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், ராதாபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகளில் அதிமுக தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டினார்.


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளோடு சேர்த்து ராதாபுரத்திலும் திமுக வெற்றிபெறும் என மு.கஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கையின் போதே பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வருவதை தடுத்ததாகவும் சாடினார்.

First published: October 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...