Video: ரஜினிக்கு பாஜக சாயம் - யார் பூசூவது? அரசியல் தலைவர்கள் கருத்து

News18 Tamil
Updated: November 8, 2019, 7:58 PM IST
News18 Tamil
Updated: November 8, 2019, 7:58 PM IST
தனக்கு பாஜக சாயம் பூச முயற்சி நடப்பதாக நடிகர் ரஜினிகாந்த் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தான் அவ்வாறு முயற்சிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுபோல், ரஜினியின் குற்றச்சாட்டு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்திற்கு சில கட்சிகள் மத சாயம் பூசி, அவர்கள் பக்கம் இழுக்க முயற்சித்த நிலையில், அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக இன்று அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

இந்நிலையில், சென்னையில் நியூஸ் 18 செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த்துக்கு காவி சாயம் பூச தான் முயற்சிக்கவில்லை என விளக்கம் அளித்தார்.


ரஜினி மீது யார் காவி சாயம் பூச முயற்சித்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

ரஜினியின் கருத்தையும் அவரது வெளிப்படைத் தன்மையையும் பாராட்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினியை தாங்கள் ஒருபோதும் பாஜகவுக்கு அழைக்கவில்லை என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

Loading...

பாஜக உடனான உறவு குறித்து ரஜினி தெளிவாக விளக்கமளித்துவிட்டதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

சாதி மதங்களை கடந்த ரஜினிகாந்துக்கு யாரும் மதச் சாயம் பூச முடியாது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ரஜினியின் விளக்கத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...