நானும், கமலும் நிச்சயமாக இணைவோம்! பச்சைக்கொடி காட்டும் ரஜினி

  • News18
  • Last Updated: November 19, 2019, 10:23 PM IST
  • Share this:
நானும், கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் கட்டாயம் இணைவோம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்த 60 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு தமிழ் திரைத்துறைச் சார்பில் விழா எடுத்துகொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ரஜினியும், கமலும் அரசியலில் இணையவேண்டும்’என்று தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘நானும், ரஜினியும் அரசியலில் இணையவேண்டிய தேவை ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம்’ என்று தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘நானும், கமலும் அரசியலில் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டால் கட்டாயம் இணைந்து செயல்படுவோம்’என்று கமலின் கருத்தை ஆமோதித்துப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ‘என்னுடைய கருத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்திருப்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்’ என்று தெரிவித்தார்.

அவருடைய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Also Read: ரஜினியும் நானும் அரசியலில் இணைவோம் - கமல்ஹாசன் அதிரடி

Also see: 
First published: November 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...