நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரன்தான் காஸ்ட்லி வேட்பாளர்! சொத்து விபரங்கள் வெளியாகின

கட்டுமான தொழில் செய்து வரும் இவர், நகைகள், வியாபார முதலீடுகள் ஆகியவற்றை சேர்த்து 23 கோடியே 12 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் கூறியிருக்கிறார்.

நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரன்தான் காஸ்ட்லி வேட்பாளர்! சொத்து விபரங்கள் வெளியாகின
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்
  • Share this:
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் இருந்து அவர்களின் சொத்துவிவரங்கள் வெளியாகி உள்ளன. 

வரும் 21ம் தேதி இடைத்தேர்தலை காண உள்ள நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன் போட்டியிடுகிறார். கட்டுமான தொழில் செய்து வரும் இவர், நகைகள், வியாபார முதலீடுகள் ஆகியவற்றை சேர்த்து 23 கோடியே 12 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் கூறியிருக்கிறார்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாகவும் அவர் கணக்கு காட்டியிருக்கிறார். மனைவி பெயரில் 22 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும்,  6 கோடியே 22 லட்சம் ரூபாய் கடனும் உள்ளதாக மனோகரனின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேபோன்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன், தனக்கு 1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களும் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் நிலுவையும் உள்ளதாக தெரிவித்துள்ளார்

மனைவி பவளவல்லி பெயரில் 1 கோடியே 28 லட்சம் மதிப்பிலான சொத்து, 2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் வங்கி கடன் உள்ளதாகவும் நாராயணின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணனுக்கு 22 லட்சம் மதிப்பில் சொத்துக்களும்,  அவரது மனைவி பெயரில் 8 லட்சம் மதிப்பில் நகைகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு கடன் ஏதும் இல்லை என்றும் மனைவிக்கு 1 லட்சம் நகை கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.Also Watch

First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்