வேட்பாளர் அறிவோம் - திருநெல்வேலி அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன்

மனோஜ் பாண்டியன், 2001-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்.

வேட்பாளர் அறிவோம் - திருநெல்வேலி அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன்
மனோஜ் பாண்டியன்
  • News18
  • Last Updated: March 29, 2019, 8:10 PM IST
  • Share this:
மனோஜ் பாண்டியன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

அதிமுக-வின் பி.ஹெச்.பாண்டியனின் மகன் தான் மனோஜ் பாண்டியன். பி.ஹெச்.பாண்டியன் கடந்த 1977-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1999-ம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது மகனான மனோஜ் பாண்டியன், 2001-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். தற்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மனோஜ் பாண்டியன் பி.எல்., எம்.எல்., படிப்பை நிறைவு செய்துள்ளார்.


1993-ம் ஆண்டு கட்சியில் இணைந்த மனோஜ் பாண்டியன் அதிமுக-வின் வழக்கறிஞர்கள் அணியில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னாள் எம்.பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கணினி... அமமுக தேர்தல் அறிக்கை!
First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்