வேட்பாளர் அறிவோம் - கனிமொழி (தூத்துக்குடி தி.மு.க.)

பத்திரிகைகளில் இதழியலாளராகப் பணியாற்றியுள்ள கனிமொழி, 2004-ம் ஆண்டு முதல் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

வேட்பாளர் அறிவோம் - கனிமொழி (தூத்துக்குடி தி.மு.க.)
எம்.பி., கனிமொழி
  • News18
  • Last Updated: March 23, 2019, 6:36 PM IST
  • Share this:
தூத்துக்குடி தொகுதியில் மக்களவைக்கான வேட்பாளராக தி.மு.க சார்பில் கனிமொழி களம் காண்கிறார்.

மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இதழியலாளர், கவிஞர், இலக்கியவாதி எனப் பன்முகத் திறமை கொண்டவராக அறியப்படுகிறார் கனிமொழி.

சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தவர் எத்திராஜ் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். தொடக்கக் காலத்தில் ’தி இந்து’, குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் இதழியலாளராகப் பணியாற்றியுள்ள கனிமொழி, 2004-ம் ஆண்டு முதல் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.


திமுக-வின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் ஆகிய பதவிகளிலும் கனிமொழி இருந்துள்ளார். திமுக-வின் மகளிரணிச் செயலாளராகவும் கனிமொழி உள்ளார்.

மேலும் பார்க்க: தேர்தல் 40/40: தூத்துக்குடி தொகுதி ஒரு சிறப்பு பார்வை
First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்