வேட்பாளர் அறிவோம் - சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா

1999 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வியைத் தழுவியுள்ளார் ஹெச்.ராஜா.

வேட்பாளர் அறிவோம் - சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
  • News18
  • Last Updated: March 29, 2019, 8:11 PM IST
  • Share this:
சிவகங்கை பா.ஜ.க வேட்பாளராக ஹெச்.ராஜா முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ஹெச்.ராஜா முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளராக இருந்த ஹெச். ராஜா 1989-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.

2001-ம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியிலிருந்து வெற்றிப் பெற்றார். பாஜக-வில் மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் தேசியச் செயலாளர் ஆகியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.


1999 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வியைத் தழுவியுள்ளார். வழக்கறிஞராகவும், சிஏ பயிற்சியும் பெற்றுள்ள ஹெச்.ராஜா தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பார்க்க: பொருளாதாரம் தெரியாத பிரதமர் மோடி, ஜெட்லி! சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு
First published: March 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்