அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்! பா.ஜ.க கடும் விமர்சனம்

  • News18
  • Last Updated: November 20, 2019, 5:35 PM IST
  • Share this:
கூட்டணி கட்சிகளுக்கு இடம் தராமல் தவிர்க்கவே மேயர் உள்ளிட்ட பதவிகளை மறைமுகத் தேர்தல் மூலம் நடத்த ஆளும்கட்சி முயற்சி செய்கிறது என்று பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை டிசம்பர் 13-ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. தமிழகத்தில் மேயர், நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பதவிகளுக்கு தற்போது நேரடித் தேர்தல் நடைபெறும் முறை உள்ளது.

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர், நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையில் தேர்தல் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டது என்று செய்திகள் வெளியானது.


இந்தநிலையில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘மேயர் பதவி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் மேயர் உள்ளிட்ட பதவிகளைக் கேட்பதைத் தவிர்க்கவே அ.தி.மு.க அரசு இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜனநாயக சீர்கேடை ஆளும் கட்சி தற்போது செய்துள்ளது.

அ.தி.மு.கவுக்கு நேரடித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தெம்பு இருந்தால் ஏற்கெனவே இருந்தமுறையில் நேரடித் தேர்தல் முறையில் தேர்தலை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும்’ என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

படிக்க: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் - ஓ.பி.எஸ் உறுதி

Loading...

Also see:


First published: November 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...