உடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு உடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் ஒருசேர பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.

உடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு உடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் ஒருசேர பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.
  • Share this:
- கபில் கஜால்
மும்பையிலிருந்து வேலை நிமித்தமாக பெங்களூரு வந்தவர் தான் கரிஷ்மா மாலன் (23). பெங்களூரு வந்த சில ஆண்டுகளில் அடோபிக் டெர்மடாடிஸ் என்ற ஒரு வகை சரும நோயால் பாதிக்கப்பட்டார். நோய் பாதிப்பை கண்டறிய சோதனைகளுக்காக மட்டும் 6,000 ரூபாய் செலவு செய்துள்ளார். பின்னர் மாதந்தோரும் குறைந்தது 3,500 ரூபாயாவது சரும பாதுகாப்புக்காக செலவு செய்துவருகிறார்.

அதிகரிக்கும் காற்று மாசுவினால் மனிதர்கள் பலவிதமான நோய்கள் மற்றும் சரும் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மாதந்தோரும் ஒரு கணிசமான தொகையை வைத்திய செலவுகளுக்கு வைத்துவிட வேண்டியுள்ளதாக வேதனையுடன் கூறுகிறார் கரிஷ்மா.


”என்னுடைய ஐந்து வயது மகன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவனை நாங்கள் இரு சக்கர வாகனத்தில் நகரம் முழுவதும் அழைத்துச் செல்வோம். இங்கு உள்ள காற்று மாசு பற்றியும் முகமூடி அணியவேண்டும் என்பது பற்றியும் அப்போது எங்களுக்குத் தெரியாது. அதன் விளைவால் தான் தற்போது எங்கள் மகனுக்கு ஆஸ்துமா வந்துள்ளது.

ஆரம்பத்தில் இது வெறும் இருமல் என்று தான் நினைத்தேன். ஆனால் இரண்டு வாரங்களாகியும் குறையாமல் அப்படியே இருக்கும். பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபின் தான் எங்களுக்கு அது ஆஸ்துமா என்று தெரியவந்தது. திடீரென இரவில் விழுத்தெழுவான் தொடர்ந்து 10 நிமிடங்கள் இருமுவான்.

இதிலிருந்து அவனை ஆசுவாசப்படுத்த நெப்பிளைசர் என்ற கருவியை வாங்கினேன். அதன் விலை சுமார் 4000 ரூபாய். அதுமட்டுமில்லாமல் மாதந்தோறும் என் மகனின் மருத்துவ செலவுக்கு என்று சுமார் 3000 ஆகிறது” என்று கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் ஜஸ்வந்தர் சிங் (36).வெகுசிலரால் மட்டுமே காற்று மாசுவினால் அதிகரிக்கு மருத்துவச் செலவுகளை செய்ய இயலும். ஏறத்தாழ சுமார் 63 மில்லியன் மக்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். அவர்களால் இந்த செலவுகளைச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பத்தில் ஒன்பது பேர் மெல்லிய துகள்கள், நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் மற்றும் மாசு நிறைந்த காற்றையே சுவாசிக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
காற்றில் ஏற்படும் மாசுவினால் மனிதர்களுக்கு மாரடைப்பு, இதய கோளாறுகள், நுரையீரல் தொடர்பான நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை வருவதாக உலக சுகாதார நிறுவனம் நடித்திய ஆய்வில் தெரிகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரு நகரத்தில் வசிக்கும் .1000 பேரிடம் ஒரு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஆஸ்துமா நோயால் தான் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நோயாளியின் ஆண்டு செலவு சுமார் 50,000 வரை உள்ளதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

மருந்துகளை வாங்கவே மக்கள் அதிக செலவு செய்கிறார்கள் என்றும் அதிலும் குறிப்பாக சிஒபிடி (COPD) என்ற நுரையீரல் தொடர்பான நோய்க்கு மட்டும் 50 % பேர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தங்களை காக்க மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு அடுத்த படியாக ஆஸ்துமா நோயால் சுமார் 36.7% பேர் பாதிக்கபட்டுள்ளனர். அதேபோல் மற்ற சுவாசம் தொடர்பான நோய்களுக்கு சுமார் 29.6% மற்றும் 24.4% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமுறைகள் - அதிக செலவுகள்

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்க்கு மருத்துவம் பெற சுமார் 3 முதல் 3.7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யவேண்டியுள்ளது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவ சிகிச்சை செலவுகள் ஓரளவு குறைந்தே காணப்படும் ஆனால் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் சிறந்த மருத்துவ சிகிச்சைகள் பெற அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. என்கிறது ஒரு காப்பீடு நிறுவனம்.

கடந்த சில ஆண்டுகளாக இதயநோய்க்கு மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவ சிகிச்சை முறைகள் மாறுபட்டாலும் இதய நோய்களுக்கு பரிசோதனை, தொடர் மருத்துவ ஆலோசனை போன்றவற்றால் இதற்கு சிகிச்சை பெற சுமார் 3-5 லட்சம் வரை செலவாகும் என்கிறது காப்பீடு நிறுவனம்
“கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் காற்று மாசு அதிகரித்துவிட்டதாகவும்” இந்திய அறிவியல் கழகத்தின் நுரையீரல் மருத்துவ நிபுணர் பரமேஸ்.

1999ம் ஆண்டு நகரில் 8 % பேர் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே 2018ம் ஆண்டு 22 % ஆக அதிகரித்தது. இதற்கு காரணம் நகரில் அதிகரித்து வரும் காற்று மாசுவாகும். நகரில் வசிக்கும் மக்கள், மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சராசரியாக 85.2 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர்.

காற்று மாசு அதிகரித்ததே பெங்களூரு மாநகரில் 70% நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மக்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர்.

“மொத்த உள்நாட்டு உற்பத்தியும் காற்று மாசுவின் தாக்கமும்”
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் காற்று மாசு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கி தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது. காற்று மாசுவினால் 1.4 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். 505 பில்லியன் டாலர்களை மருத்துவத்துக்கு செலவிடுகின்றனர். உயிரிழந்த ஊழியர்களுக்காக சரிசரியாக 55.4 மில்லியன் டாலர்களை நிறுவனங்கள் இழப்பீடாக வழங்கி வருகிறது. இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2013 ஆம் ஆண்டில் 8.5 % ஆக குறைந்து வருகிறது.

போக்குவரத்தில் மாற்றங்கள் செய்தால் அது பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்று உலக வங்கி தெரிவிக்கிறது. மரபுசாரா எரிசக்தியால் ஓடும் வாகனங்களை பயன்படுத்துவதும் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதும் காற்று மாசு அளவை குறைக்க உதவும். அதேபோல முறையான திட்டமிடல் தேவையில்லாத பயணங்களை குறைத்துக்கொள்வது உள்ளிட்டவற்றை கண்காணித்தால் காற்று மாசு அளவானது குறையும்.

காற்றுமாசு அளவைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நோய் தாக்கமும் குறையும். நோய்க்கான மருத்துவச் செலவுகளும் குறையும் என்று இந்திய சூழலியல் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி திரு. எல்லப்ப ரெட்டி தெரிவிக்கிறார்.

(இந்த செய்தியின் எழுத்தாளர் 101Reporters.com-ன் அங்கத்தினர்.)
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading