கொரோனா தாக்கம்: ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுத்தம் செய்யப்படும் இண்டிகோ விமானம்!

"விமான நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஒருமுறை தங்களது கவசங்கள் அனைத்தையும் புதுப்பித்துக் கொள்கின்றனராம்"

கொரோனா தாக்கம்: ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுத்தம் செய்யப்படும் இண்டிகோ விமானம்!
"விமான நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஒருமுறை தங்களது கவசங்கள் அனைத்தையும் புதுப்பித்துக் கொள்கின்றனராம்"
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்று உலகையே உலுக்கி எடுத்து வருகிறது. சுகாதார நடவடிக்கையாக இந்த சூழலில் இண்டிகோ விமான நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

சுகாதார நடவடிக்கையாக ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறையும் விமானம் முழுவதுமாக தானியங்கியாக சுத்தப்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளைக் கொண்டு விமானத்தின் உட்புறம் முழுவதும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு ஒரு முறையும் சுத்தப்படுத்தப்படுகிறது.

கூடுதலாக இருக்கைகள், கேபின் அரங்க, காக்பிட் என அத்தனையும் கிருமி நாசினி கொண்டு புதுப்பிக்கப்படுகிறது. விமானத்தின் ஃபில்டர்களும் சுத்தப்படுத்தப்படுகின்றன. உள்ளிருக்கும் காற்றையும் தொடர் இடைவெளியில் புதுப்பிப்பதாகவும் அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


விமான நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஒருமுறை தங்களது கவசங்கள் அனைத்தையும் புதுப்பித்துக் கொள்கின்றனராம். நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனம் தன்னுடைய அத்தனை விமானங்களுக்கும் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையிலேயே தூய்மை முறைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.மேலும் பார்க்க: BS-VI என்றால் என்ன... கட்டாயம் ஏன்... வாகனங்கள் வாங்க இது தகுந்த நேரமா...?
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories