புதுச்சேரியில் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் வள்ளலார் சங்கம்!

புதுச்சேரியில் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் வள்ளலார் சங்கம்!
வள்ளலார் சங்கம்
  • Share this:
ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் அவதியுறும் மக்களைத் தேடி சுடசுட உணவளிக்கிறது புதுச்சேரியில் உள்ள வள்ளலார் சங்கம்.

கொரானா நோய் தொற்றை தடுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் தெருவோரம் வசிப்பவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என பலரும் அவதியுறுகின்றனர்.

இதனை உணர்ந்து புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கும் அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கசத்திய சாதனை சங்கம் சார்பில் தினமும் 3 வேளையும் பாதிக்கப்பட்டவர்களை தேடி தேடி சென்று உணவளித்து வருகின்றனர்.


காலையில் கஞ்சி, நண்பகலில் கஞ்சி மற்றும் நோய் எதிர்ப்பு கசாயம், மதியம் சுடசுட சாப்பாடு, இரவு டிபன் என அளிக்கப்படுகிறது. இதற்காக தட்டாஞ்சாவடி சன்மார்க்க மையத்தின் சமையல் கூடத்தில் மூன்று வேளையும் சமையல் வேலை நடக்கிறது.

இச்சேவையை அறிந்த பல்வேறு தொண்டு நிறுவனத்தினரும், அரிசி மற்றும் உணவு பொருட்களை இலவசமாக அளிக்கிறார்கள். காய்கறி வியாபாரிகள் காய்கறிகளை இலவசமாக அளிக்கிறார்கள். மேலும் உணவளிக்கவும் சமையல் வேலை செய்யவும் இளைஞர்கள் வருகின்றனர்.

இதனால் தினமும் கஞ்சி 125 கிலோ அரிசியிலும், ஆயிரம் பேர் குடிக்க கூடிய வகையில் மோர், 1000 பேர் குடிக்க கூடிய வகையில் வள்ளலார் கூறிய கசாயம் அளிக்கப்படுகிறது. கசாயத்தில் கரிசலாங்கன்னி, தூதுவலை, வல்லாரை, மொசுமொசுக்கு இலை, மிளகு, சீரகம், கருப்பட்டி போன்ற பொருட்கள் கலக்கப்படுகிறது. இதனை தினமும் குடித்தால் தேகம் சுத்தமாகும்,நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று தெரிவிக்கின்றனர்.Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories