Choose your district
தமிழக மாப்பிள்ளை... கேரள பொண்ணு...! இ-பாஸ் கிடைக்காததால் செக்போஸ்டில் அரங்கேறிய திருமணம்
கேரளாவில் நடைபெற இருந்த திருமணத்திற்கு இ.பாஸ் கிடைக்காததால், இருமாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் திருமணம் அரங்கேறியுள்ளது.

- News18 Tamil
- Last Updated: May 25, 2020, 1:39 PM IST
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி சுப்பிரமணியன் கோவில் தெருவைச் சேர்ந்த ரத்னம் மகன் பிரசாந்த் (25) என்பவருக்கும்,
கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவரது மகள் காயத்ரி (19) என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு வாளார்டி என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெறுவதற்கு இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், மகணமகன் ஆன்லைன் மூலம் கேரளா செல்ல விண்ணப்பித்தும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. மணமகனுக்கு இ.பாஸ் அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல், மணமகள் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடிக்கு திருமணக்கோலத்தில் மணமகன் மற்றும் மணமகள் வந்தனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இருமாநில போலீஸ் விசாரித்தனர்.
விவரத்தை இருதரப்பினரும் தெரியப்படுத்தி, திருமணம் நடைபெற இருந்த கோவிலுக்க செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இ.பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என கேரள போலீசார் மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மணமகன் குடும்பத்தார் காவல் துறையினரிடம் தங்களது நிலை குறித்து எடுத்துரைக்க, காவல்துறையின் யோசனையின்படி முகூர்த்த நேரத்திற்குள் சோதனைச்சாவடி அருகே திருமணம் செய்ய முடிவு செய்தனர்.இதையடுத்து இரு குடும்பங்களும் பேசி ஒருமனதாக முடிவெடுத்து, மணமகன் பிரசாந்த் மற்றும் மணமகள் காயத்ரி இருவருக்கும் திருமணம் நடந்தது. எல்லைப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருத்த இருமாநில காவல்துறையினர், வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர் மணமக்களை வாழ்த்தினர்.
தொடர்ந்து இருவருக்கும் இ.பாஸ் இல்லாத காரணத்தால், மணப்பெண் கேரளாவிற்கும் மணமகன் கம்பத்திற்கு என தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். திருமணத்தால் மணமக்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், மணமக்கள் இருவரும் சோகத்துடன் பிரிந்து சென்றனர்.
கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவரது மகள் காயத்ரி (19) என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு வாளார்டி என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெறுவதற்கு இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.