முகப்பு /செய்தி /இந்தியா / நிர்வாணமாக்கப்பட்ட காதலன்... காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் கொடூரம்..!

நிர்வாணமாக்கப்பட்ட காதலன்... காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் கொடூரம்..!

கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

நடந்த சம்பவத்தை கூறி  அழுத இளைஞருடன் மலையில் இளம்பெண்ணையும் கடத்தியவர்களையும் காவல் துறையினர் தேடி அலைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Mumbai |

காதலனோடு தனிமையில்  பேசிக்கொண்டு இருந்த இளம்பெண்ணை கடத்தி 2 இளைஞர்கள் கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பால்கர் மாவட்டம் விரார் மலை பகுதியில் ஜிவ்தானி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் மாலை வேளையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து  பேசிக்கொண்டு இருந்தனர். இதை அங்கு மதுகுடிக்க வந்த விரார் கிழக்கு சாய்நாத் பகுதியை சேர்ந்த தீரஜ் சோனி (வயது 25), லட்சுமண் ஷிண்டே(22) கவனித்தனர்.

தனிமையில் இருந்த ஜோடியை செல்போனில் படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டி வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றனர்.  வாலிபர் கையில் பணம் இல்லாததால் நண்பரிடம் கூகுள் பே மூலம் ரூ.500 அனுப்புமாறு கேட்டு உள்ளார். அந்த நேரத்தில் மது அருந்த வந்த தீரஜ் மற்றும் லட்சுமண்  இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த வாலிபர்,  அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தீரஜ்ஜைத் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இரண்டு  வாலிபர்களும் இளைஞரின் ஆடைகளை முழுவதுமாக கழற்றிவிட்டு அவரை கட்டிபோட்டனர். பின்னர்,  இளம்பெண்ணை மலையின் மற்றொரு பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன் பின்னர் அங்கிருந்து தப்பிய இளம்பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் போராடி கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு காதலர் மலையை விட்டு இறங்கி தன்னுடன் வந்த காதலியை காப்பாற்ற உதவி கேட்டுள்ளார். ஆடைகள் களைந்த நிலையில் இருந்ததால் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று எண்ணி மக்கள் அவரை தவிர்த்துள்ளனர்.

இந்நிலையில் ஆடைகள் களையப்பட்ட இளைஞர் வீதிகளில் சுற்றிய தகவல் அறிந்து காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.  நடந்த சம்பவத்தை கூறி  அழுத இளைஞருடன் மலையில் இளம்பெண்ணையும் கடத்தியவர்களையும் காவல் துறையினர் தேடி அலைந்துள்ளனர். யாரும் கிடைக்காத நிலையில் பெண் கடத்தப்படும் முன்னர் வாலிபர்களின் ஒருவரை தான் தலையில் தாக்கியதாக காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.

அதன் பின் அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரனை முடுக்கிவிடப்பட்டது.  அப்போது அருகில் உள்ள மருத்துவமனையில் தலையில் அடிபட்டு சிகிச்சை பெரும் நோயாளி பற்றிய தகவல்  புகைப்படத்துடன் காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள நபரை காதலர் அடையாளம் கண்டதும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து தீரஜ் சோனியை கைது செய்தனர்.

இதையும் பாருங்க :தாயை இழந்த குழந்தைக்காக தினமும் 10 கி.மீ சென்று பால் வாங்கிய தந்தை.. பசு மாட்டை பரிசளித்த நிதியமைச்சர்..!

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் லட்சுமண் ஷிண்டேயையும் கைது செய்தனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததாக போலீசார் கூறினர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது வீட்டில் இருந்து காவல் துறையினர் மீட்டனர்.  அவரது  வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

First published:

Tags: Arrest, Gang rape, Mumbai