அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உயர் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் உயர்தரமான பொருட்கள் கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்படுகின்றன. உதாரணமாக, ராஜஸ்தானில் இருந்து பெறப்பட்ட சுண்ணாம்பு கற்கள், நேபாளத்தில் இருந்து பிரத்யேகமாக சாலகிராமமும் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராமர் கோவிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு, உலகப் புகழ் பெற்ற மிக மிக உயர் தரமான சகவான் தேக்கு மரமும் பயன்படுத்தப்படுகிறது. உயர்தர தேக்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சந்திராபூர் மாவத்தில் உள்ள காடுகளில் உள்ளன. இவற்றை மகாராஷ்டிரா வன மேம்பாட்டுக் கழகம் வழங்குகிறது.
கோவில் கட்டுமானத்துக்கு 1800 கியூபிக் மீட்டர்கள் அளவுக்கு மரம் தேவைப்படுகிறது. மார்ச் 29 ஆம் தேதி மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் தொடங்கி, முதல் தொகுப்பு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா...? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
பிரம்மாண்டமான கோவில் என்பது மட்டுமில்லாமல், இந்த கோவில் நேர்த்தியாக கட்டி முடிப்பதற்காகவே, ஸ்ரீ ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்திரம் என்ற ஒரு அறக்கட்டளையை உருவாக்கி உள்ளனர். இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில், கைவினைத்திறன், தரமான பொருட்கள், மற்றும் வலிமையான கோவில் கட்டமைப்பு ஆகியவை ஆய்வு செய்யப்படுகிறது.
தேக்கு மரத்தில் கோவிலின் முகப்பு மற்றும் அலங்காரம்
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் இருக்கும் காடுகளில் இருந்து பெறப்படும் உயர் தரமான தேக்கு மரத்தின் மூலம் அயோத்தி கோவிலின் முகப்பு வடிவமைக்கப்பட்டும். அதுமட்டுமில்லாமல், கோயிலை அலங்கரிக்க பயன்படுத்தும் மிக நுண்ணிய வேலைப்பாடுகளும் இங்கே இருந்து பெறப்படும் மரங்களில் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, கோவில் கட்டுமானத்தில் முகப்பு, பிரதான வாயில் மற்றும் பிற முக்கிய இடங்களில் அதிக அளவு தேக்கு மரம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட அனுமதி.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடியின சமூகம்..!
மிகவும் உயர்தரமான தேக்கு என்பது சந்திராபூர் மட்டும் கட்சிரோலி ஆகிய இரண்டு இடங்களில் கிடைக்கும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் வன ஆய்வு இன்ஸ்ட்டிட்யூட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் கூறியிருக்கின்றனர். ராமர் கோயிலை கட்டி வரும் லார்சன் அண்ட் டர்போ நிறுவனம் கோவிலின் அறக்கட்டளை சார்பாக இந்த மரங்களை ஆய்வு செய்து, பிறகு ஒப்புதல் அளித்தது.
தேக்கு மரங்களை வெட்ட உலக அளவில் பிரபலமாக இருக்கும் பல்லார்பூர் நகர்
கோவில் மிகவும் வலிமையாக கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஸ்ரீ ராம் மந்திர் தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை, சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூர் நகர் என்ற ஊரில் தான் தேக்கு மரங்களை வெட்ட தேர்வு செய்துள்ளது. பல்லார்பூர் நகர் உலக அளவில் தேக்கு மரம் வெட்டுவதற்கு பிரபலமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!
மார்ச் 29 அன்று முதல் தொகுப்பு சரக்கு அனுப்பபப்டுகிறது
அயோத்தியில் கோவில் கட்டுமானத்திற்கு, முதல் சரக்கு FDCM டிப்போவில் இருந்து மார்ச் 29 ஆம் தேதி அன்று அனுப்பப்படுகிறது. இந்த சரக்கு சந்திராபூரில் உள்ள தேவி மகாகாளி ஆலயத்தில் இருந்து பூஜை நடத்தப்பட்டு ஊர்வலமாக புறப்படும். வழியில் பல இடங்களில் வழிபாடு நடைபெறும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பல்லார்பூர் அல்லப்பள்ளி சாலையில் உள்ள வன நுழைவு வாயிலில் இருந்து மாலை 3.30 மணிக்கு இதற்கான ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு தேவி மகாகாளி ஆலயத்தை சென்றடையும் என்றும், அங்கு சர்வமத வழிபாடு நடத்தப்பட்டு, மிகப்பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayodha, Ayodhya Ram Temple