முகப்பு /செய்தி /இந்தியா / "370 சட்டம் மீண்டும் வரும்வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

"370 சட்டம் மீண்டும் வரும்வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

மெஹபூபா முஃப்தி

மெஹபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தும் வரை நான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி. இவர் அங்குள்ள முன்னணி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராவார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு 370ஐ மீண்டும் கொண்டுவந்து அமல்படுத்தும்வரை தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மெகபூபா தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில் கூறியதாவது, "ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தும் வரை நான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. நான் இதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றபோது எல்லாம், ஜம்மு காஷ்மீர் சட்டம், இந்திய சட்டம் இரண்டையும் கொண்டு, இரண்டு கொடிகளுடன் பதவியேற்றுள்ளேன். நான் எடுத்துள்ள இந்த முடிவு முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் எனக்கு உணர்ச்சிகரமான விஷயமாகும் என்றுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு தன்னால் கூற முடியாது" என்றுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், பாஜக தனக்கு சாதகமான நேரம் வரும்போது தான் தேர்தலை அறிவித்து நடத்தும் என்று மெகபூபா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை..! சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டமான 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய பாஜக அரசு நீக்கியது. மாநிலத்தில் இருந்து லடாக்கை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இந்த மாற்றம் நிகழ்ந்து சுமார் 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையார் ராஜீவ் குமார் வாக்குறுதி தந்ததாக முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Article 370, Jammu and Kashmir, Mehbooba Mufti