முகப்பு /செய்தி /இந்தியா / டிக்கெட் எடுப்பதில் தகராறு.. நடத்துனரை தாக்கிய பெண் போலீஸ் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்

டிக்கெட் எடுப்பதில் தகராறு.. நடத்துனரை தாக்கிய பெண் போலீஸ் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்

நடத்துனர் பெண் போலீஸ் சண்டை

நடத்துனர் பெண் போலீஸ் சண்டை

மாநகரப் பேருந்து நடத்துனரை பெண் போலீஸ் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் பயணிகளின் பயணத்தை ஸ்மார்ட்டாக மாற்றும் விதமாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும்போது, ​​பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. இதையடுத்து பெண் போலீஸ் ஒருவர் பேருந்து நடத்துனரை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பருசாகர் நகருக்குச் செல்லும் பேருந்தில் பெண் போலீஸ் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது டிக்கெட் எடுப்பது தொடர்பாக நடத்துனருக்கும் பெண் போலீசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  பெண் காவலர் டிக்கெட்டுக்கு ரூ.33-க்கு பதிலாக ரூ.20 மட்டுமே தந்ததாகக் கூறப்படுகிறது. மீதி 13 ரூபாயை தராமல் பிடிவாதமாக இருந்த அவரிடம் நடத்துனர் முழு கட்டணத்தை கேட்டதால், ஆத்திரமடைந்த பெண் காவலர் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இருதரப்பினரின் புகாரின் பேரில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்தின் நடத்துனரை பெண் காவலர் அடித்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. விசாரணையில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime News, Police, Tamil News