முகப்பு /செய்தி /இந்தியா / ரேபிடோ ஓட்டுநர் பாலியல் தொல்லை... ஓடும் பைக்கிலிருந்து குதித்த இளம்பெண்... வெளியான அதிர்ச்சி வீடியோ..!

ரேபிடோ ஓட்டுநர் பாலியல் தொல்லை... ஓடும் பைக்கிலிருந்து குதித்த இளம்பெண்... வெளியான அதிர்ச்சி வீடியோ..!

காட்சிப்படம்

காட்சிப்படம்

பைக் ஓட்டுநர் ஓடிபி எண்ணை சரிபார்ப்பதாக கூறி பெண்ணின் செல்போனை வாங்கி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

  • Last Updated :
  • Bangalore, India

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பெண் ஒருவர் ஓடும் பைக்கில் இருந்து குதித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 30 வயதான பெண் ஒருவர் இந்திரா நகருக்குச் செல்ல ரேபிடோ பைக் டாக்ஸியை புக் செய்தார். இரவு 11 மணியளவில் வந்த ஓட்டுநர் அப்பெண்ணை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றார். அப்போது பைக் ஓட்டுநர் ஓடிபி எண்ணை சரிபார்ப்பதாக கூறி பெண்ணின் செல்போனை வாங்கிக்கொண்டு பைக்கை வேறு இடம் நோக்கி ஓட்டியுள்ளார்.

இதனால் அப்பெண் ஓட்டுநரிடம் எச்சரித்ததோடு சத்தம் போட்டுள்ளார். ஆனால் ஓட்டுநர் அதனை பொருட்படுத்தாமல் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அப்பெண் ஓடும் பைக்கிலிருந்து குதித்துள்ளார்.

இதை அடுத்து காவல் துறையினரிடம் அந்த பெண் புகாரளித்ததன் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டது. அதன்படி தீபக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

top videos
    First published:

    Tags: Bangalore, Rapido App, Sexual harassment