முகப்பு /செய்தி /இந்தியா / துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள்... தலைநகரில் பதற்றம்

துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள்... தலைநகரில் பதற்றம்

காட்சிப்படம்

காட்சிப்படம்

டெல்லியில் பெண்ணில் தலை உட்பட உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது. அங்கு சராய் காலே கான் ISBT பகுதியில் நேற்று மதியம் பிளாஸ்டிக் பையில் பெண்ணின் உடல் பாகங்கள் தெரிந்த நிலையில் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தியதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தலை எழுப்புக்கூடான நிலையில் வெள்ளை பிளாஸ்டிக் பையில் இருந்துள்ளது.

உடல் பாகங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், எய்ம்ஸ் Trauma மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர் குழு உடல் பாகங்கள் கைப்பற்றிய இடங்களில் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

Also Read : கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரதமர் மோடி..!

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார் என்பதைக் கண்டறியும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Dead body, Delhi, Women