தம்பதி இடையே சிறிய விஷயங்களுக்காக ஏற்படும் சண்டைகள் எதிர்பாராத விபரீதங்களில் முடிந்து விடும் என்பதற்குக்கு ஏற்ப அதிர்ச்சி சம்பவம் ஒன்று கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஹன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம்.
இவரது மனைவி 30 வயதான நந்தினி. இருவருக்கும் கல்லூரி காலத்தில் இருந்தே பழக்கம் இருந்த நிலையில், காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று கணவர் கவுதம் மற்றும் மனைவி நந்தினிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் கவுதம் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். சில நாள்களாக இவருக்கு வேலை பளு அதிகம் இருந்ததால் மனைவியிடம் முறையாக பேசி நேரம் கழிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பவ தினமான வியாழன் அன்று மனைவி நந்தினிக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
தனக்கு சாக்லேட் வாங்கிதர வேண்டும் என கணவரிடம் மனைவி கேட்டுள்ளார். சரி வாங்கித் தருகிறேன் என கூறிவிட்டு வேலைக்குச் சென்ற கணவர் சொன்னது போல அதை வாங்கி வரவில்லை. நேரம் சென்ற பின்னர் கவுதமிற்கு நந்தினி கால் செய்து பார்த்துள்ளார். ஆனால், கவுதம் அழைப்பை எடுக்கவில்லை. இந்நிலையில், வேலைகளை முடித்துவிட்டு கவுதம் தனது வாட்ஸ் ஆப்பை திறந்து பார்த்த போது தான் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரவு 11 மணி அளவில் மனைவி நந்தினி கணவருக்கு மேசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "நான் போகிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடுங்கள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார். செய்தியை பார்த்து பீதி அடைந்த கவுதம் மனைவிக்கு போன் செய்து பார்த்துள்ளார். அவர் அழைப்பை எடுக்காத நிலையில், பக்கத்து வீட்டுகாரர்களிடம் அலெர்ட் செய்து வீட்டிற்கு விரைந்துள்ளார். வீடு தாழிட்டு இருந்த நிலையில்ஸ கதவை உடைத்து உள்ள சென்று பார்த்த போது கவுதமிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிங்க: சலூனில் ஸ்டைலாக முடி வெட்டாததால் ஆத்திரம்... 16வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்... விபரீத சம்பவம்..!
மனைவி நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் நந்தினியை காப்பற்ற முடியவில்லை. நந்தினி மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விவகாரத்தில் கவுதம் மீது நந்தினி வீட்டார் எந்த புகாரும் இதுவரை தரவில்லை.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Family fight, Husband Wife, Karnataka, Suicide