முகப்பு /செய்தி /இந்தியா / கள்ளக் காதலனுக்காக இரு குழந்தைகளைக் கொன்று கால்வாயில் வீசிய தாய்.. 6 பேர் கைது

கள்ளக் காதலனுக்காக இரு குழந்தைகளைக் கொன்று கால்வாயில் வீசிய தாய்.. 6 பேர் கைது

கைது செய்யப்பட்ட நபர்கள்

கைது செய்யப்பட்ட நபர்கள்

கள்ளகாதலனுடன் சேர்ந்த தனது மகன் மற்றும் மகளை பெற்ற தாயே கொலை செய்து கால்வாயில் வீசிய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள டெல்லி கேட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹித். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதிக்கு மிராப் என்ற 10 வயது மகனும், கைனன் என்ற 6 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று வீட்டிற்கு வெளியே இந்த இரு குழந்தைகள் காணவில்லை என்று தாய் நிஷா கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தந்தை போலீசாரிடம் புகார் அளிக்கவே டெல்லி கேட் பகுதி போலீசார் சிசிடிவிக்களை ஆராய்ந்து பார்த்தனர். அதில் சம்பவ நாள் அன்று குழந்தைகள் விளையாடியதற்கான தடங்கள் ஏதும் இல்லை. எனவே, கணவர் ஷஹித் மற்றும் நிஷா ஆகியோரின் செல்போன் பேச்சுக்களை ஆராய்ந்து விசாரித்த போது தான் அதிர்ச்சி உண்மை அம்பலமானது.

நிஷாவுக்கும் அப்பகுதியின் உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் 4 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்துள்ளது. கவுன்சிலர் சவுத் மனைவியை பிரிந்து வாழ்கிறார். நிஷாவும் தனது கணவரை பிரிந்து வந்துவிடுகிறேன் என சவுத்திடம் கேட்டுள்ளார். அதற்கு நீ மட்டும் வேண்டுமானால் வரலாம். குழந்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினமான புதன்கிழமை அன்று கள்ளகாதலன் சவுத் மற்றும் நிஷா ஆகிய இருவரும் குழந்தைகள் இருவரையும் கொலை செய்து விட முடிவெடுத்தனர். இதற்கு பக்கத்து வீட்டுகாரர்கள் நான்கு பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். குழந்தைகளுக்கு மயக்க ஊசி போட்டு மயக்கமடைய வைத்து, பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்து சடலங்களை ஒரு பெட்டியில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் அதிர்ச்சி.. பள்ளியிலேயே 5ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை!

பின்னர் கார் மூலம் அதை தூக்கிச் சென்று கங்கை கால்வாயில் வீசியுள்ளனர். நிஷா, சவுத் ஆகிய இருவருடன் இணைந்து பக்கத்து வீட்டுகார்கள் 4 பேர் உடந்தையாக இருந்து இந்த கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளனர். பின்னர் குழந்தைகளை காணவில்லை என்று தாய் நிஷா நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மை அம்பலமான நிலையில், 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

First published:

Tags: Child murdered, Crime News, Extramarital affair, Illegal affair