உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் பிரபலமான மால் ஒன்று உள்ளது. இங்கு 34 வயது பெண் ஒருவர் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அன்று வழக்கமாக பணிக்கு வந்துள்ளார். பணி முடிந்ததும் சீருடை மாற்ற உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண் இருந்த அறைக்குள் அதே மாலில் வேலை பார்க்கும் பாதுகாப்பு காவலர் திடீரென உள்ளே நுழைந்தார். அந்த பெண் கூச்சலிட முயல, துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு உடந்தையாக பெண்ணுடன் வேலை பார்க்கும் இரண்டு ஆண் ஊழியர்களே இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் பின்னர் வேலைக்கு செல்லவில்லை. யாரிடமும் முதலில் இதை தெரிவிக்காமல் அச்சம் மற்றும் கவலையில் இருந்த நிலையில், பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கணவரின் உறுதுணையுடன் காவல்துறை புகார் அளித்தார். அதன் அடிப்படையில் செக்யூரிட்டி கார்டு மற்றும் இதர இரு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொசுவர்த்தி புகையால் நேர்ந்த விபரீதம்... தூக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்கள்... டெல்லியில் சோகம்..!
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகளின் அடிப்படையில் அடுத்து கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா தெரிவித்துள்ளார். பிரபல மாலில் பெண் ஊழியர் ஒருவரை சக ஊழியரே பணிபுரியம் இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Rape, Uttar pradesh