முகப்பு /செய்தி /இந்தியா / ”ஆணுறுப்பை கடித்து குதறினார்... என்னை காப்பாத்துங்க” - மனைவி மீது பகீர் புகார் அளித்த கணவர்..!

”ஆணுறுப்பை கடித்து குதறினார்... என்னை காப்பாத்துங்க” - மனைவி மீது பகீர் புகார் அளித்த கணவர்..!

புகார் அளிக்க வந்த கணவர்

புகார் அளிக்க வந்த கணவர்

மனைவி மீது வழக்குப் பதிவு செய்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா பகுதியில் உள்ள உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா, இவர் அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,  ‘சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்ற ராஜகுமாரியை நான் திருமணம் செய்து கொண்டேன். திருமணமானதில் இருந்து மனைவியின் நடத்தை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. வீட்டிற்கு தினமும் ஒருவரை அழைத்து வந்து பேசுவார். வீட்டிற்கு வருவோர்களை எனது மனைவியின் உறவினர்கள் என தான் முதலில் நினைத்தேன்.

தினமும் வீட்டுக்குள் அந்நியர்கள் வந்து செல்ல ஆரம்பித்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. தெரியாத ஆண்கள் வீட்டுக்குள் வருவதும் போவதும் சரியல்ல என்று மனைவியிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எனது மனைவி அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் என்னையும் அவரது குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி துன்புறுத்த ஆரம்பித்தார்” என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இபிஎஸ் மகன் மிதுன் அமெரிக்கா சென்றாரா...? நிரூபிக்க முடியுமா...? அமைச்சருக்கு ஜெயக்குமார் சவால்!..

top videos

     தனது 75 வயது தந்தை கல்யாண் சிங் மீது  பொய்யான பாலியல் வழக்கை மனைவி பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், “நான் ஒருநாள் மனைவியை திட்டினேன் அப்போது அவள் கோபமடைந்து என்னுடைய பிறப்புறுப்பை கடித்து குதறி விட்டார். உறவினர்கள் என்னை சிகிச்சைக்காக மொரீனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குவாலியர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். குவாலியரில் மருத்துவர்கள் எனது பிறப்புறுப்பில் மூன்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர். ஆகவே, எனது மனைவி ராஜ்குமாரி மீது வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

    First published:

    Tags: Crime News, Madhya pradesh