முகப்பு /செய்தி /இந்தியா / நான்கு பேருடன் கள்ளக்காதல்... கண்டித்த கணவருக்கு மது விருந்து... கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி..!

நான்கு பேருடன் கள்ளக்காதல்... கண்டித்த கணவருக்கு மது விருந்து... கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி..!

மனைவி மாதுரி மற்றும் 4 காதலர்கள் கைது

மனைவி மாதுரி மற்றும் 4 காதலர்கள் கைது

இந்த விஷயம் கணவர் சிவாவுக்கு தெரிய வரவே, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

தனது உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே நான்கு காதலர்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ரக்சியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு வயது 28. சிவாவுக்கு மதூரி என்ற பெண்ணுடன் திருமணம் நிகழ்ந்து, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் ஆகிய நான்கு நபர்களுடன் மனைவி மாதுரிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்த விஷயம் கணவர் சிவாவுக்கு தெரிய வரவே, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி மாதூரி, தனது கள்ளக்காதலர்கள் 4 பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி... மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ந்து போன புதுமாப்பிள்ளை...!

இதன்படி, சதித்திட்டம் தீட்டி கணவர் சிவாவை அழைத்து சென்று மது விருந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் சிவாவின் சகோதரர் வினோத்திற்கு தெரியவந்துள்ளது. அவர் காவல்துறையிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், மனைவி மாதுரி மற்றும் அவரது காதலர்கள் 4 பேரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

top videos
    First published:

    Tags: Crime News, Extramarital affair