முகப்பு /செய்தி /இந்தியா / மக்களுக்கு தீங்கு தரும் தொழில்நுட்பங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.. அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

மக்களுக்கு தீங்கு தரும் தொழில்நுட்பங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.. அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மக்களுக்கு தீங்கு தந்தால் அவை ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகால நடைபெறும் ஆட்சியில் டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளரை சந்தித்து விவரித்தார். இதில் அவர் பல்வேறு முக்கிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் கூறியதாவது, "இணையத்தில் கிரிமினல் நடவடிக்கைகளும், நச்சுத்தன்மையும் வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் 85 கோடி இந்தியர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இது 2025இல் 120 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபரின் புகைப்படங்கள், தகவல்கள் போன்ற சென்சிடிவான விஷயங்களை இணையத்தில் அத்துமீறி பரபரப்பும் குற்றச் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் பல குற்றச்சம்பவங்கள் குடிமக்களை பாதிக்காத வகையில் அரசு முன்னைப்புடன் செயல்படும் நோக்கில் உள்ளது.

சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கீழ் வரும் அம்சம் எனவே, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு கறாரான நடவடிக்கைகளை எடுக்கும். நாட்டில் டிஜிட்டல் இணைப்புகளில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், இணைய சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அரசு தொலைநோக்கு திட்டமாக வைத்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் 10 கோடி பேருக்கு சர்க்கரை நோய்... தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு- என்ன காரணம்?

செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ தொழில்நுட்பம் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஒழுங்குபடுத்தப்படும். மற்ற தொழில்நுட்பங்களுக்கும் இதே கொள்கையை தான் அரசு பின்பற்றும். மக்களுக்கு தீங்கு தரும் தொழில்நுட்பங்கள் ஒழுங்குபடுத்தப்படும் அல்லது அவை இயங்காத வகையில் தடுத்து நிறுத்தப்படும்" என அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பறிபோகும் என அஞ்ச தேவையில்லை எனக்கூறிய அமைச்சர் விரைவில் நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் இந்தியா சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.

First published:

Tags: Artificial Intelligence, IT Minister