முகப்பு /செய்தி /இந்தியா / “நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன்... ப்ளாக்மெயில் செய்ய மாட்டேன்” - டி.கே.சிவக்குமார் பேட்டி..!

“நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன்... ப்ளாக்மெயில் செய்ய மாட்டேன்” - டி.கே.சிவக்குமார் பேட்டி..!

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

கர்நாடகா காங்கிரஸில் நான் பிளவு ஏற்படுத்த மாட்டேன் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சர் யார் என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே13ஆம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என அனைவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிற்கு இருப்பதாக தகவல் வெளியானது. எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால், அவர் முதலமைச்சராக ஆதரிப்பதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

ஆனால் நேற்று டெல்லி செல்வதாக இருந்த அவர், இறுதி நேரத்தில் உடல்நிலை சரியில்லை என கூறி, டெல்லி பயணத்தை ரத்து செய்தார். முதலமைச்சர் பதவி குறித்த அதிருப்தி காரணமாகவே சிவக்குமார் டெல்லி பயணத்தை ரத்து செய்ததாக பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில், பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்த நிலையில், தனியாக இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவக்குமார். இதுகுறித்து பெங்களூரு விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர்,  “கர்நாடகாவில் 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக உள்ளோம். நான் யாரையும் முதுகில் குத்த மாட்டேன். பிளாக்மெயில் செய்ய மாட்டேன். காங்கிரஸ் கட்சி எனக்கு தாய் போன்றது.

இதையும் படிக்க : வெயில் தாக்கத்துக்கு நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு... 7 கி.மீ நடந்தே சென்றதால் விபரீதம்..!

கர்நாடகா காங்கிரஸில் நான் பிளவு ஏற்படுத்த மாட்டேன். கட்சி மேலிடம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் பொறுப்பானவன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், கட்சி நலனுமே எனக்கு முக்கியம்” என தெரிவித்தார்.

First published:

Tags: Congress, Karnataka, Karnataka Election 2023, Priyanka Gandhi