கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் நடைபெற்ற 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் (சிஎல்பி) கூட்டம் பெங்களூருவில் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும், மாநில அமைச்சரவை குறித்தும் முக்கிய விவரங்கள் பேசப்பட இருக்கின்றன. மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் அடங்கிய மேலிடப் பார்வையளர் குழு இந்த கூட்டத்தை மேற்பார்வையிட உள்ளனர்.
மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிக்கட்சித் தலைவருமான சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே சிவகுமார் ஆகியோருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. முன்னதாக , இவர்கள் இருவரும் தங்களுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர்
#WATCH | Senior Congress leader and former Karnataka CM Siddaramaiah arrives at Shangri-La hotel in Bengaluru for CLP meeting pic.twitter.com/MP33Hg2F55
— ANI (@ANI) May 14, 2023
தற்போது நடைபெறும் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் 135 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு அறிக்கையாக பார்வையளர்கள் குழு சமர்பிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களைவைத் தேர்தலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த வெற்றி இருப்பதாகவும், தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.