முகப்பு /செய்தி /இந்தியா / முதலமைச்சராக சித்தராமையா தேர்வு? - ரகசிய வாக்கெடுப்பில் சிவக்குமாருக்கு காத்திருந்த அதிர்ச்சி?

முதலமைச்சராக சித்தராமையா தேர்வு? - ரகசிய வாக்கெடுப்பில் சிவக்குமாருக்கு காத்திருந்த அதிர்ச்சி?

சிவக்குமார் மற்றும் சித்தராமையா

சிவக்குமார் மற்றும் சித்தராமையா

நாளை மதியம் 3.30மணி முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்து அனைத்தும் ரத்து

  • Last Updated :
  • Karnataka, India

பெங்களூருவில் நடைபெற்ற எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில், 24 சதவீதம் எம்.எல். ஏ. க்கள் மட்டுமே சிவக்குமார் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக யாரை அறிவிப்பது என்பது குறித்து டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.ராகுல் காந்தியின் இல்லத்தில் முதலில் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சித்தராமையாவைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமாரும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவக்குமாரை முதலமைச்சராக்கவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் சோனியா காந்தி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.535 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற லாரி... தாம்பரம் அருகே பரபரப்பு

இந்த சூழலில், டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக அறிவிக்கக் கோரி, டெல்லியில் சோனியாகாந்தி இல்லத்துக்கு வெளியே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 5 ஆண்டுகளும் சிவக்குமாரைத் தான் முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனிடையே தனக்கு முதல்வர் பதவி தராவிட்டால் சித்தராமையாவுக்கும் தரக் கூடாது என டி.கே. சிவக்குமார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக்க பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

top videos

    இந்த நிலையில் டெல்லியில் ஆதரவாளர்களுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனது தம்பி டிகே.சுரேஷ் எம்பி இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நாளை மதியம் 3.30 மணி முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Congress, Karnataka Election 2023