ஒரு மாதமாக பஞ்சாப் போலீஸுக்கு போக்கு காட்டி வந்த அம்ரித் பால் சிங் கைது செய்யப்பட்டார். ஒரு மனிதரை பிடிக்க மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு இணைய சேவையை முடக்கும் அளவுக்கு அப்படி என்ன செய்தார் அம்ரித்பால்.
வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பை தீப் சித்து என்ற பஞ்சாபி நடிகர் உருவாக்கி இருந்தார். கடந்தாண்டு பிப்ரவரி 15ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் தீப் சித்து உயிரிழந்தார். வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பை தீப் சித்துவுக்கு பிறகு நிர்வகித்து வருபவர் தான் இந்த அம்ரித் பால் சிங். 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அம்ரித்பால் சிங், துபாய்க்கு கூலி வேலைக்கு சென்றவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான், பிரிட்டனைச் சேர்ந்த கிரண் தீப் கவுரை திருமணம் செய்து கொண்டு இந்தியா திரும்பினார்.
”பிரதமர் மோடி மீதான இந்த பாசமே பாஜகவின் பலம்” - வீடியோ வெளியிட்டு அமித்ஷா பெருமிதம்!
சீக்கியர்களுக்கு என தனி நாடு தேவை என்பது காலிஸ்தான் அமைப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது. காலிஸ்தான் ஆதரவாளராக கருதப்படும் அம்ரித் பால் சிங் மிகக் குறுகிய கால கட்டத்தில், பஞ்சாபில் மிக முக்கிய நபராக வலம் வந்தார். 1984ம் ஆண்டு இந்திரா காந்திக்கு நேர்ந்தது போல, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் நிகழும் என மிரட்டல் விடுத்ததால் தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தார் அம்ரித் பால், அம்ரித்பாலின் நண்பர் லவ் பிரீத் சிங் என்பவர் பல்வேறு குற்றச்செயல்களில் முக்கிய குற்றவாளியாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் லவ் பிரீத் சிங்கை விடுவிக்க வேண்டும் என்பதற்காக அம்ரித் பால் சிங், தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன
இதே கோரிக்கையுடன் அம்ரித் பால் தலைமையிலான குழுவினர் சிறைச் சாலையை சேதப்படுத்தினர்.கடந்த மார்ச் 18ம் தேதி அம்ரித் பாலை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் முயன்ற போது காரில் இருந்து பைக் மூலம் தப்பிச் சென்றார். இதையடுத்து அம்ரித் பாலை தேடப்படும் குற்றவாளியாக பஞ்சாப் போலீஸ் அறிவித்து, அவர் பதுங்கியிருந்ததாக கூறப்படும் பகுதிகளில் இணைய சேவைகளை முடக்கி, 144 தடை உத்தரவும் விதித்தனர். பஞ்சாப் மட்டுமின்றி, டெல்லி, ஹரியானாவிலும் அம்ரித் பால் தலைமறைவாக வலம் வந்தார்.
அம்ரித் பாலின் நெருங்கிய நபர்கள், கூட்டாளிகளை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர். அம்ரித் பாலை தேடுவதால் அமெரிக்கா, கனடா தூதரங்கள் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கடந்த 20ம் தேதி பிரிட்டன் தப்ப முயன்ற அம்ரித்தின் மனைவி கிரண்தீப் கவுரை போலீசார் கைது செய்தனர்.பல்வேறு மாறு வேடங்களில் வலம் வந்த அம்ரித் பால் மோகா மாவட்டத்தில் சரணடைய முயன்றார். அப்போது பஞ்சாப் போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Panjab