எப்போதாவது நீங்கள் முழு ஹெலிகாப்டரை சாப்பிடுவது போல் உணர்ந்திருக்கிறீர்களா..? சரி, இப்போது உங்களால் அந்த உணர்வை பெற முடியும். ஆம், பெயருகேற்றவாறு 'ஹெலிகாப்டர்' என்கிற பன்-ஐ மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் கடையை நடத்தி வரும் Uttam da என்பவர் உருவாக்கி உள்ளார். இந்த சுவையான, சீஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்ட ரோஸ்டட் பன் மிகவும் புதுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. டான் போஸ்கோ பள்ளிக்கு அடுத்ததாக சிலிகுரியில் உத்தம் டா புகழ்பெற்ற சிற்றுண்டிக் கடை ஒன்றை வைத்துள்ளார். இவரது ‘ஹெலிகாப்டர் பன்’-ஐ ருசிக்க நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் இங்கு குவிவது வழக்கம்.
உத்தமின் தந்தை பிகாஷ் முஹுரி 1997-இல் டான் போஸ்கோ பள்ளிக்கு முன்னால் உணவுக் கடையைத் தொடங்கினார். அந்த கடை அன்றிலிருந்து பிரபலமாகி உள்ளது. அந்தக் கடைக்கு தன் மகனின் பெயரை கொண்டு ‘உத்தம் பாஸ்ட் ஃபுட்’ என்று பெயரிட்டுள்ளார். இப்போது, உத்தமின் ‘ஹெலிகாப்டர் பன்’ அந்த நகருக்கு வெளியே பயணித்து, பெங்களூரு மற்றும் டெல்லி வரை பிரபலமாகி உள்ளது. இந்த ஸ்பெஷல் பன் அறிமுகம் செய்வதற்கு முன்பு பள்ளி குழந்தைகள் தான் அதிகம் வருவார்கள். ஆனால், தற்போது அவரது சிறப்பு உணவுகள் சிலிகுரி முழுவதும் பரவியதால், அதிகமான அளவில் உள்ளூர்வாசிகளும் சாப்பிட வருகின்றனர்.
இந்த 'ஹெலிகாப்டர் பன்' பெயரின் பின்னணியில் உள்ள ரகசியம் குறித்து உத்தமிடம் கேட்டபோது, “முதலில் நான் இதை ‘பிளேன் பன்’ என்றுதான் அழைத்தேன். பின்னர் நான் அதை மேம்படுத்தி வேறு வழியில் பரிமாறத் தொடங்கியபோது, பிளேன் பன் என்பதற்கு நான் ஒரு வேடிக்கையான பெயரை வைத்தேன். அப்போதில் இருந்து தான் 'ஹெலிகாப்டர் பன்' உருவானது. ஒரு நாள் எனது வாடிக்கையாளர் ஒருவரிடம் ஹெலிகாப்டர் பன் சாப்பிடச் சொன்னேன். அவர் அந்த பன் சிறப்பாக இருந்தது என்றார். இந்த பன் மசாலா - உருளைக்கிழங்கு நிரப்பப்பட்ட ரொட்டி, வெண்ணெயில் வறுத்து, சீஸ் உடன் பரிமாறப்படுகிறது." என்று கூறினார்.
உத்தம் கடையின் வழக்கமான வாடிக்கையாளரான கிஷோர் சஹா கூறுகையில், “நான் 20 வருடங்களாக இந்தக் கடைக்கு வந்து சாப்பிடுகிறேன். இங்கு மிகவும் சுவையான மற்றும் புதிய உணவுகளை வழங்குகிறார்கள். இந்த சிற்றுண்டிகளை சாப்பிடாதவர்களுக்கு இதன் சுவை புரியாது, எனவே கண்டிப்பாக அனைவரும் இங்கு ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள் என்று சொல்வேன்" என்றார்.
தொழிலதிபர் மனோஜ் அகர்வால் கூறுகையில், "பள்ளியில் படிக்கும் போது உத்தம்தாவிடம் இருந்து இந்த ஹெலிகாப்டர் பன்-ஐ சாப்பிட்டேன். பள்ளி முடிந்து ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டிற்குச் செல்வேன். இப்போதும் அதே சுவைதான். சில சமயங்களில் இந்தக் கடையில் இருந்து வீட்டிற்குச் உணவு வாங்கி சென்று எல்லோருடனும் சாப்பிடுவேன்." என்று கூறினார். Uttam da-வின் புதுமையான 'ஹெலிகாப்டர் பன்' மிகுந்த சுவையாக இருப்பதால் இதற்கு பல வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending