முகப்பு /செய்தி /இந்தியா / ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு... முன்வைத்த முக்கிய கோரிக்கை..!

ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு... முன்வைத்த முக்கிய கோரிக்கை..!

 மம்தா பேனர்ஜி முதலமைச்சர் முக ஸ்டாலின்

மம்தா பேனர்ஜி முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாநிலச் சட்டப்பேரவைகளில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலவரையறைக்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற சிறப்பு தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்     சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். மேலும், இத்தகைய தீர்மானத்தை பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த கோரிக்கைக்கு டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.  அரசியலமைப்பு மற்றும்  கூட்டாட்சி கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டாக எதிர்க்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர்.

top videos

    அந்த வகையில் தற்போது, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் ஆளுநர்களுக்கு எதிராக கூட்டாக செயல்படுவது குறித்த தனது முழு ஆதரவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.  மேலும், அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் ஒன்றாக சந்தித்து  அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin, Mamata Banerjee