முகப்பு /செய்தி /இந்தியா / மம்தா அரசைக் கண்டித்து பேரணி... பேருந்துகள் மீது கல்வீச்சு... பாஜகவினர் கைது...

மம்தா அரசைக் கண்டித்து பேரணி... பேருந்துகள் மீது கல்வீச்சு... பாஜகவினர் கைது...

பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்க மாநிலத்தில், அரசைக் கண்டித்து பேரணி சென்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கியவர்களை கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கலியாகஞ்ச் பகுதியில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போராட்டம் வெடித்ததால் காவல் நிலையத்தில் தீ வைப்புச் சம்பவங்கள் அரங்கேறின.

தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்ட பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கூச் பிகார் மற்றும் சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி பேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியவர்களை கைது செய்தனர்.

First published: