முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதியில் திடீர் ஐஸ் மழை.. பக்தர்கள் உற்சாகம்

திருப்பதியில் திடீர் ஐஸ் மழை.. பக்தர்கள் உற்சாகம்

திருப்பதி

திருப்பதி

Tirupathi Temple : திருப்பதி மலையில் இன்று சுமார் அரை நேரம் திடீரென்று ஐஸ் மழை பெய்தது

  • Last Updated :
  • Tirupati, India

கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் தற்போதைய நிலையில் திருப்பதி மலையில் இன்று சுமார் அரை மணி நேரம் திடீரென்று ஐஸ் மழை பெய்தது.

கடந்த சில நாட்களாகவே திருப்பதி, திருமலை உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் காலை காலை 10 மணிக்கு மேல் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது.

பின்னர் மீண்டும் மாலை ஐந்து மணிக்கு மேல் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மழை பெய்து இந்த தாக்கம் குறையாதா என்று பொதுமக்கள் ஏங்கி வருகின்றனர்.

top videos

    இந்த நிலையில் திருப்பதி மலையில் இன்று சுமார் அரை நேரம் திடீரென்று ஐஸ் மழை பெய்தது.இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்களும் வெயிலின் தாக்கம் குறைந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    First published:

    Tags: Tamil News, Thirumala, Tirupathi, Weather News in Tamil