முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து போராடுவோம் - காங்கிரஸ்

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து போராடுவோம் - காங்கிரஸ்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடுவோம் - காங்கிரஸ்

  • Last Updated :
  • Delhi, India

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவு படுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். 4 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி எச்.எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி எச்.எச்.வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டார். உடனடியாக பிணைக்கு ராகுல் காந்தி தரப்பு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Also Read : எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்

இந்நிலையில் தற்போது எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடுவோம். இது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். எங்களின் குரலை நசுக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Congress, Rahul Gandhi, Tamil News