முகப்பு /செய்தி /இந்தியா / Watch | மைசூரில் 'தோசை சுட்டு ' மகிழ்ந்த பிரியங்கா காந்தி.. வைரலான வீடியோ

Watch | மைசூரில் 'தோசை சுட்டு ' மகிழ்ந்த பிரியங்கா காந்தி.. வைரலான வீடியோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மைசூரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  தேர்தல் எதிர்வரும் மே மாதம்  10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

பிஜேபி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மைசூரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வாக்கு சேகரிப்பின் போது, உணவுக் கடை ஒன்றில் பிரியங்கா காந்தி தோசை சுட்டார். இந்த சம்பவம், சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் குறிப்பில், " புகழ்பெற்ற Myalri உணவக நிறுவனர்களுடன் தோசை சுட்டு மகிழ்ந்தேன். நேர்மையும்,  கடின உழைப்பும் கொண்டு இயங்கும் நிறுவனத்துக்கான மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.

உங்களின் அன்பான விருந்தோம்பலுக்கு எனது நன்றி... தோசையும்  சுவையாக இருந்தது.... எனது மகளை மைசூருக்கு அழைத்து வந்து  சாப்பிட வைக்க  ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தியின் இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி, " சரியான வடிவில் இருக்கும் இந்த தோசைகள் ஒரு தொடக்கம் தான். திறன்படைத்த இந்த கைகள் இந்த உலகிற்கு எல்லையற்ற  ஆக்கங்களை கொண்டு வரும்" என்று பதிவிட்டுள்ளது.

top videos

    இன்று, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய  சட்டமன்றத் தொகுதிகளில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், காங்கிரஸ் தரப்பில் இருந்து அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.    

    First published:

    Tags: Congress, Karnataka Election 2023, Priyanka Gandhi, Tamil News