முகப்பு /செய்தி /இந்தியா / Video: இந்தியாவின் கடைசி கிராமம்.. பழங்குடி மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Video: இந்தியாவின் கடைசி கிராமம்.. பழங்குடி மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

முருகன்

முருகன்

இணை அமைச்சர் எல் முருகன் 3 நாள் பயணமாக கடந்த 21ம் தேதி நாகலாந்து சென்றடைந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாகாலாந்துக்கு சென்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அங்குள்ள புச்சூரி பழங்குடியின பெண்களுடன் உற்சாகமாக நடனமாடினார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன் 3 நாள் பயணமாக கடந்த 21ம் தேதி நாகலாந்து சென்றடைந்தார். அதன்பின்,  ஹெலிகாப்டர் மூலம் பெக் மாவட்டத்திற்கு சென்ற அவர், அம்மாவட்டத் தலைமையகத்தில் உள்ள மாவட்ட திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு வாரிய மாநாட்டு அரங்கில் பல்வேறு துறைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் (சிஎஸ்ஓ) அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

இந்தியா-மியான்மர் எல்லையில் இந்த பெக் மாவட்டத்தில் உள்ள அவக்கங் என்ற கிராமம் இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தை பார்வையிட்ட முருகன், குறிப்பிட்ட இந்த கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம் இல்லை என்றும், அதுதான் இந்தியாவின் முதல் கிராமம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவக்கங் கிராமத்தில் உள்ள புசூரி இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் கனவான அனைவருக்கான வளர்ச்சி என்பதை உணர்த்தும் வகையில் எல்லையில் உள்ள கிராமங்கள் வளர்ச்சி அடையும் என்றும் அவர்  தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: L Murugan