முகப்பு /செய்தி /இந்தியா / முகத்தில் மூவர்ண கொடி வரைந்த பெண்ணுக்கு பொற்கோயிலில் அனுமதி மறுப்பு .. சர்ச்சை வீடியோ வைரல்..!

முகத்தில் மூவர்ண கொடி வரைந்த பெண்ணுக்கு பொற்கோயிலில் அனுமதி மறுப்பு .. சர்ச்சை வீடியோ வைரல்..!

முகத்தில் மூவர்ண கொடி வரைந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

முகத்தில் மூவர்ண கொடி வரைந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

முகத்தில் மூவர்ண கொடி வரைந்து வந்த பெண்ணுக்கு பஞ்சாப் பொற்கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  • Last Updated :
  • Punjab, India

பஞ்சாப் மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில். சீக்கியர்களின் பிரதான புனித தலமாக உள்ள பொற்கோயிலுக்கு நாள்தோறும் பலர் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ ஒரு பெண், ஆண் ஒருவர் துணையுடன் கோயிலுக்கு வருகிறார். அந்த பெண் தனது முகத்தில் மூவர்ண கொடியை வரைந்துள்ளார். அந்த பெண் கோயிலுக்குள் நுழைவதை பார்த்து அங்கு பணிபுரியும் ஊழியர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதற்கு அந்த நபர் பெண்ணின் முகத்தில் வரைந்திருக்கும் மூவர்ண கொடியை சுட்டிக்காட்டி, “இது பஞ்சாப், இந்தியா அல்ல” என்று கூறுகிறார். தொடர்ந்து உடன் வந்த ஆண் ஊழியர்களிடம் என்ன முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி பிரபந்தக் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

கமிட்டியின் பொதுச்செயலாளர் குருசரண் சிங் கரேவால் கூறுகையில், "பெண் முகத்தில் வரைந்திருந்த மூவர்ண கொடியில் அசோக சக்கரம் இல்லை.  எனவே, ஊழியருக்கு அடையாளம் தெரியாமல் இருந்திருக்கலாம்.

top videos

    அதேவேளை அவரின் செயல் தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு சீக்கிய கோயில், ஒவ்வொரு மத தலத்திற்கும் ஒரு ஒழுங்கு இருக்கும். அதை பின்பற்றும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்" என்றுள்ளார்.

    First published:

    Tags: Punjab, Viral Video