முகப்பு /செய்தி /இந்தியா / சினிமா பட பணியில் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிய முகமுடி நபர்... வீடியோ வைரல்!

சினிமா பட பணியில் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிய முகமுடி நபர்... வீடியோ வைரல்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

ஹரியானா சாலையில் முகமுடி அணிந்து காரில் பயணித்த நபர், ரூபாய் நோட்டுகளை காரில் வீசி எறிந்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

  • Last Updated :
  • Haryana, India

சினிமா காட்சி பாணியில் ஒரு நபர் தனது காரில் இருந்து கரண்சி நோட்டுகளை சாலையில் வீசி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விநோதமான செயல்களில் ஈடுபட்டு திடீரென பரபரப்பை கிளப்புவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் ஒரு நபர் சினிமா காட்சியை உண்மையாக செய்து காட்டி தற்போது காவல்துறை கண்காணிப்பு வலையத்தில் சிக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷஹித் கபூர் நடிப்பில் வெளியாகி பிரபலமடைந்த வெப் சீரிஸ் 'பர்சி'. இந்த வெப் சீரீஸ்-இல் பணத்தை சாலையில் வீசி எறிவது போல காட்சி ஒன்று வரும். இந்த காட்சியை அப்படியே நினைவு படுத்தி காட்டுவது போன்ற பரபரப்பு செயலை ஹரியானாவில் ஒரு நபர் செய்து காட்டியுள்ளார்.

ஹரியானாவில் உள்ள கோல்ப் கோர்ஸ் ரோடு பகுதியில் வெள்ளை நிறக் காரில் பயணத்த ஒரு நபர் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு, அந்த காரின் பின்புற வழியாக பண நோட்டுகளை வீசி எறிந்தார். இந்த கட்சி வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரின் பதிவு எண் தெளிவாக தெரிகிறது. இந்த போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

top videos

    இது தொடர்பாக பேசிய குருகிராம் ஏசிபி விகாஸ் கவுசிக், "சமூக வலைத்தளத்தின் மூலமாகத் தான் இந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. சினிமா காட்சியை நேரில் செய்து காட்டும் நோக்கத்தில் கோல்ப் கோர்ஸ் ரோடு பகுதியில் இரு நபர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். பொதுவெளியில் அத்துமீறி இவர்கள் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம்" என்றார்.

    First published:

    Tags: Haryana, Viral Video