முகப்பு /செய்தி /இந்தியா / வந்துவிட்டது டிரைவர் இல்லாமல் இயங்கும் ஆட்டோமேட்டிக் டிராக்டர்.! - இனி விவசாயிகள் ரிமோட் மூலம் வயலை உழலாம்..!

வந்துவிட்டது டிரைவர் இல்லாமல் இயங்கும் ஆட்டோமேட்டிக் டிராக்டர்.! - இனி விவசாயிகள் ரிமோட் மூலம் வயலை உழலாம்..!

ஆட்டோமேட்டிக் டிராக்டர்

ஆட்டோமேட்டிக் டிராக்டர்

அனைத்து துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதில் நவீன தொழில்நுட்பங்களுக்கும், இயந்திரங்களுக்கும்  பெரும் பங்கு உண்டு. பல நாட்கள் பாடுபட்டு செய்ய வேண்டிய பணிகளை விரைவிலேயே முடிக்க நவீன தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

  • Last Updated :
  • Telangana, India

அனைத்து துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதில் நவீன தொழில்நுட்பங்களுக்கும், இயந்திரங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பல நாட்கள் பாடுபட்டு செய்ய வேண்டிய பணிகளை விரைவிலேயே முடிக்க நவீன தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

அந்த வகையில் விவசாய பணிகளை எளிதாக, வசதியாகவும் செய்ய பல இயந்திரங்கள், கருவிகள் மற்றும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை செலவு குறைந்ததாக மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுகின்றன. இதன் ஒரு பகுதியாக மனிதவளம் மற்றும் உழைப்புச் செலவுகளைச் சேமிக்க, தெலுங்கானாவில் இருக்கும் காகதியா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தை (Kakatiya Institute of Technology and Science - KITS) சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு டிரைவர் இல்லாமல் இயக்க கூடிய ஆட்டோமேட்டட் டிராக்டரை கண்டுபிடித்துள்ளனர்.

விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களை ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரிமோட் மூலம் இயக்க உதவும் நோக்கில், குறைந்த விலையில் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாரங்கல் KITS கம்ப்யூட்டர் சயின்ஸ் & எஞ்சினியரிங் (CSE) பேராசிரியர் டாக்டர் பி.நிரஞ்சன் கூறுகையில் டிரைவர் இல்லாத தானியங்கி டிராக்டருக்கான திட்டத் தொகை ரூ.41 லட்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

Android அப்ளிகேஷனில் இயங்கும்:

கம்ப்யூட்டர் கேம் போன்று ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இந்த ஆட்டோமேட்டிக் டிராக்டரை இயக்க முடியும் என KITS-ன் CSE பேராசிரியர் நிரஞ்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த டிராக்டரின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த திட்டத்தின் தலைமை ஆய்வாளர் எம்.டி.ஷர்புதீன் வாசிம் கூறுகையில், விவசாயிகள் வசதியாக வயல்களை உழுவதற்கு இந்த தானியங்கி டிராக்டர் உதவும். குறைந்த செலவில் இயங்கும் இந்த டிராக்டரால் விவசாயிகளின் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும் என்றார். விவசாயத்தில் மனித உழைப்பைக் குறைப்பதே இந்த டிராக்டரை கண்டுபிடிப்பதன் முக்கிய குறிக்கோள் என்று KITS பேராசிரியர்கள் கூறி இருக்கிறார்கள். விவசாயிகள் இந்த டிராக்டரை ரிமோட் கன்ட்ரோல் டிவைஸ் மூலம் இயக்கலாம்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் இன்டர்பேஃஸை KITS குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த குழு டிராக்டருக்கு ஒரு மைக்ரோகண்ட்ரோலரை பொருத்தி உள்ளது. மேலும் மனித இடையூறு இல்லாமல் கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டரை இயக்க மூன்று ஆக்டிவேட்டர்ஸ்களை இந்த குழுவினர் பொருத்தினர். ஸ்டீயரிங்கை இயக்குவதற்காக வாகனத்தில் மோட்டாரையும் பொருத்தினர். ஆளில்லா டிராக்டரை மொபைல் போன் மூலம் இயக்கும் வகையில் Remote interference-ஐ இந்த டீம் உருவாக்கியது.

இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மெசேஜ் கிளவுட்டைச் சென்றடையும், அங்கிருந்து அறிவுறுத்தல்கள் மொபைலை சென்றடையும். இதன் மூலம் ஒரு விவசாயி தனது டிராக்டரை தனது வீட்டில் இருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ தனது பண்ணை வயலில் இயக்கலாம் என்று KITS டீம் தெரிவித்துள்ளது.

top videos

    தங்களது இந்த கண்டுபிடிப்பிற்காக 45 ஹெச்பி கொண்ட டிராக்டரை பயன்படுத்தி வெற்றிகரமாக இயக்கியுள்ளதாக கூறினர். ஒரு விவசாயி தனது டிராக்டரை ஆட்டோமேட்டட் ஆக்க வேண்டுமென்றால் தங்களது கண்டுபிடிப்பை பயன்படுத்த ரூ.20,000 மட்டும் செலவு செய்தால் போதும் என்கிறது KITS டீம்.

    First published:

    Tags: Farmers, Telangana