முகப்பு /செய்தி /இந்தியா / சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

Vijaykumar Gangapurwala Gangapurwala: கடந்த 1962 ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் டி.ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். கடந்த 1962 ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

இதையும் வாசிக்கதமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத சிபிஎஸ்இ பள்ளிகள்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா,

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

top videos

    அடுத்த ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    First published:

    Tags: Chennai High court, Chief justice of india, Madras High court