தெலங்கானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரியாணிக்கான அரிசியை கடை ஊழியர்கள் கழிவறையில் அலசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. தெலங்கானாவின் சித்திபேட் பகுதியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.
ஓட்டலுக்கு தண்ணீர் கொண்டு வரும் மோட்டார் பழுதடைந்ததால் உணவகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இதனால், பிரியாணி அரிசியை கழுவ கழிவறை தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர்.
கழிவறைக்குள் பிரியாணி அரிசி கழுவப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்துள்ளார். அதற்கு ஊழியர்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை. உடனே வாடிக்கையாளர்கள் உரிமையாளரைக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
#Biryani rice being washed in #toilets at #Sonyrestaurant in #Siddipet in #telanganapolice state. #CustomerService question the owner nd he says as water is nt coming outside, so workers cleaning here. @Bachanjeet_TNIE @siddipetcp @Collector_SDPT @cpsiddipet @BRSHarish @KTR_News pic.twitter.com/HJX3yi9RmK
— R V K Rao_TNIE (@RVKRao2) April 22, 2023
அதற்கு உரிமையாளரோ, "தண்ணீர் வரவில்லை, எனவே ஊழியர்கள் இங்கு சுத்தம் செய்கிறார்கள்" என்று கூலாக கூறியுள்ளார். ஓட்டல் உரிமையாளர் அலட்சியமாக பதிலுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. ஹோட்டலில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து இந்த ஹோட்டலில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
இதையும் பாருங்க :ஆடு வளர்ப்பில் அசத்தல் முயற்சி - மாத்தி யோசித்த தெலுங்கானா விவசாயி
மேலும் இது போன்ற செயல் புரிந்த ஹோட்டலை மூட வேண்டும் என்று ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Briyani, Hotel, Trending News, Viral Video