முகப்பு /செய்தி /இந்தியா / ஒடிசா ரயில் விபத்து; நெஞ்சை பதறவைக்கும் கடைசி நிமிட திக் திக் காட்சிகள்!

ஒடிசா ரயில் விபத்து; நெஞ்சை பதறவைக்கும் கடைசி நிமிட திக் திக் காட்சிகள்!

ஒடிசா ரயில் விபத்தின் கடைசி நிமிட காட்சி

ஒடிசா ரயில் விபத்தின் கடைசி நிமிட காட்சி

Odisha Train Tragedy | ஒடிசா ரயில் விபத்தின் கடைசி நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தின் அதிர்ச்சியூட்டும் காணொலி ஒன்று வெளியாகி உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 288 உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று கூறப்பட்டது. சதி செயலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், விபத்தின் போது ரயிலுக்குள் இருந்த பயணிகள் அலறிய அதிர்ச்சியூட்டும் காணொலி தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில்,  தூய்மை பணியாளர் ஒருவர் பெட்டியை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். பயணிகள் அனைவரும் தங்கள் படுக்கையில் படுத்துள்ளனர். அப்போது திடீரென ரயில் குலுங்குகிறது. அடுத்த சில வினாடிகளில் ஒட்டுமொத்த இடமும் இருளில் மூழ்கி விடுகிறது. தொடர்ந்து பயணிகளின் அலறல் சத்தம் ஒலிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனிடையே ஒரே நேரத்தில் 3 ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையை மறைப்பதற்காக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரைத்ததா என்றும் மம்தா வினவியுள்ளார்.

First published:

Tags: Odisha, Train Accident