முகப்பு /செய்தி /இந்தியா / 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த வீரப்பன் கூட்டாளி மாதையன் கர்நாடகாவில் மரணம்..

31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த வீரப்பன் கூட்டாளி மாதையன் கர்நாடகாவில் மரணம்..

மாதையன்

மாதையன்

31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த வீரப்பனின் கூட்டாளி மாதையன் கர்நாடகாவில் உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Karnataka, India

சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் முக்கிய கூட்டாளியாக இருந்த மாதையன் கர்நாடகாவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மீசை மாதையன் எனப்படும் மாதையன். இவர் சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் முக்கிய கூட்டாளி ஆவார்.

1993ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய இவர், கர்நாடகா காவல்துறையிடம் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து மாதையனிடம் 4 தடா வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருடன் சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாசம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்ற விசாரணையில் இவர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதில் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்ட நிலையில், அன்றைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி அதை நிராகரித்தார். கருணை மனு நிராகரிப்பு தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியதில் இந்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து நால்வரும் நீண்டகாலமாக மைசூரு சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். சிறையில் இருந்த சைமன் என்பவர் 2018இல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளி பிலவேந்திரன் 2022இல் உயிரிழந்தார். இந்நிலையில் மைசூரு சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த மீசை மாதையனுக்கு கடந்த 11ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்...

top videos

    முதலில் மைசூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். உயிரிழந்த மாதையனின் மனைவி மற்றும் 2ஆவது மகன் மேட்டூர் அருகே உள்ள செங்கபாடியில் வசித்து வருகின்றனர். அவர்களிடம் மாதையனின் உடலை ஒப்படைக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    First published:

    Tags: Karnataka, Veerappan