முகப்பு /செய்தி /இந்தியா / 'முதல் இந்திய கிராமம்' மானா- அறிவிப்புப் பலகை வைத்த BRO! காரணம் என்ன ?

'முதல் இந்திய கிராமம்' மானா- அறிவிப்புப் பலகை வைத்த BRO! காரணம் என்ன ?

முதல் இந்திய கிராமம்' மானா

முதல் இந்திய கிராமம்' மானா

இந்தியாவை நோக்கி வரும் மக்களுக்கு வாயிலாய் இருப்பதால் இந்த எல்லை கிராமங்களை இனி இந்தியாவின் முதல் கிராமங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

  • Last Updated :
  • Chennai |

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சாலை நெட்வொர்க்குகளைப் பராமரிக்கும் பொறுப்பு கொண்ட எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO ) திங்களன்று எல்லைக் கிராமமான மானா வாசலில் ' முதல் இந்திய கிராமம் ' என்று எழுதப்பட்ட பலகையை வைத்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி, உத்திரக்காண்ட்  முதல்வர் புஷ்கர் சிங்கிற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து எல்லைப்புறங்களில் உள்ள கிராமங்களின் அடையாளம் மாற்றப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக உத்திரக்கண்ட் மாநிலத்தின் சாமோலியில் உள்ள இந்திய-சீனா எல்லையில் அமைந்துள்ள மானா(MANA) கிராமம், இனி 'முதல் இந்திய கிராமம்' என்று அறியப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்திய எல்லையில் இருக்கும் வெளிநாடுகளை  ஒட்டியுள்ள கிராமங்களை 'இந்தியாவின் கடைசி கிராமம்' என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் உலகமயமாதல் , வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வரும் பொருளாதார நிலையை அடுத்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவை நோக்கி வரும் மக்களுக்கு வாயிலாய் இருப்பதால் இந்த எல்லை கிராமங்களை இனி இந்தியாவின் முதல் கிராமங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த தொடக்க விழாவில்  பேசிய மோடி, "என்னைப் பொறுத்தவரை, எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமம்" என்று கூறினார். அதற்கு பின் பேசிய உத்திரக்கண்ட் முதல்வர் தாமி,  பிரதமர் மோடியின் தலைமையில், நாட்டின் எல்லைப் பகுதிகள் மிகவும் துடிப்பானதாக மாறி வருவதாக  கூறினார். இதற்காக, 'வைப்ரண்ட் வில்லேஜ்' என்ற  திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடப்பட்டுள்ள 'வைப்ரண்ட் வில்லேஜ்' திட்டம், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட், லடாக் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 19 மாவட்டங்கள், 46 எல்லைத் தொகுதிகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எல்லையோர கிராமங்களை மேம்படுத்துதல், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரிய அறிவு மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுலாத் திறனைப் பயன்படுத்துதல் மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மேம்படுத்துதல் ஆகியவை 'வைப்ரண்ட் வில்லேஜ்' திட்டத்தின் நோக்கமாகும்.

அதுமட்டும் அல்லாமல் "ஒரு கிராமம், ஒரு தயாரிப்பு" என்ற கருத்தின் அடிப்படையில் நிலையான சுற்றுச்சூழல்-விவசாய வணிகங்களை மேம்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தால் 'வைப்ரண்ட் வில்லேஜ்' செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க இத்திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று கூறிய முதல்வர், “21ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தம் உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சொந்தமானது” என்று பிரதமர் மோடி கூறியது புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் நமக்குள் நிரப்புகிறது." என்றார்

இதையும் பாருங்க : மசோதா குறித்து ஆளுநர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

top videos

    "மோடி-ஜியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 2025ஆம் ஆண்டுக்குள் உத்தரகாண்ட் மாநிலத்தை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்ற, 'குறை இல்லாமல் தீர்ப்போம்' என்ற அடிப்படை மந்திரத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்," என்று  முதல்வர் தாமி கூறினார்.

    First published:

    Tags: Uttarkhand