முகப்பு /செய்தி /இந்தியா / 15 நிமிஷத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க ட்ரெய்னிங்.. ஷாக் தகவல்.. கொள்ளை கும்பல் தலைவனை தேடும் போலீஸ்

15 நிமிஷத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க ட்ரெய்னிங்.. ஷாக் தகவல்.. கொள்ளை கும்பல் தலைவனை தேடும் போலீஸ்

காட்சி படம்

காட்சி படம்

லக்னோவில் 39 லட்சத்திற்கு மேல் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபட்ட நிலையில், அவர்களது தலைவராக கருதப்படும் 'ஏடிஎம் பாபா' தலைமறைவானார்.

ஏப்ரல் 4 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்மில் ரூ. 39,58,000 திருடியதாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அவர்கள் 'ஏடிஎம் பாபா'விடம் திருட்டு தொழிலை கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அதில் நீரஜ் என்பவர் 'ஏடிஎம் பாபா' குழுவின் நிரந்திர உறுப்பினர் என்றும், 'ஏடிஎம் பாப்பா'விடம் பல ரகசியங்களை கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்களின்படி, 'ஏடிஎம் பாபா' எனக் கூறப்படும் சுதிர் மிஸ்ரா பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது. வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு ஏடிஎம்மை எப்படி விரைவாக அணுகுவது, காவல்துறையிடம் இருந்து அவர்களின் அடையாளத்தை மறைப்பது, ஏடிஎம் பணப்பெட்டியை உடைத்து 15 நிமிடங்களில் எப்படி வெளியேறுவது போன்ற வழிமுறைகள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

Also Read : ஓட்டுநர் பாலியல் தொல்லை.. ஓடும் பைக்கில் இருந்து குதித்த பெண்.. அதிர்ச்சி வீடியோ

top videos

    பயிற்சியைத் தொடர்ந்து, 15 நாள் நேரடி செயல் விளக்கமும் நடத்தப்படுகிறது. உத்தரப்பிரதேச மற்றும் பீகார் காவல்துறை கவனம் இப்போது பான்-இந்திய ஏடிஎம் கொள்ளை தலைவரான மிஸ்ராவை பிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

    First published:

    Tags: Crime News