கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மே 10ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. பொதுவாக 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், படித்த நகர்ப்புற பகுதிகளில் தான் வாக்கு பதிவு சதவீதம் ஒப்பீட்டு அளவில் குறைந்து காணப்படுகிறது.
படித்து நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் தான் ஆர்வத்துடன் வாக்களிப்பதில்லை என்ற புகார்கள் முன்வைக்கப்படும் நிலையில், இங்கு ஒருவர் சர்கார் விஜய் பாணியில் அமெரிக்காவில் இருந்து கிளம்பி விமானம் மூலம் பல்லாயிரம் மைல்கள் கடந்து இந்தியாவுக்கு வாக்களிக்க ஆர்வமாக வந்துள்ளார். ஆனாலும், அவரால் வாக்களிக்க முடியவில்லை என்பது தான் பெரும் சோகமாகும்.
கர்நாடகாவின் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான ராகவேந்திர கமால்கர். இவர் கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் வசித்து வந்தாலும் இந்திய குடிமகனாக வாழும் இவர் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதும் கர்நாடகா வந்து வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடைசியாக 2019 மக்களவை தேர்தலில் கூட வாக்களித்துள்ளார் ராகவேந்திரா. இந்நிலையில், 2023 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க சுமார் ரூ.1.5 லட்சம் செலவு செய்து 14,000 கிமீ தூரத்தை விமானம் மூலம் கடந்து ஊருக்கு வந்துள்ளார். மே 10ஆம் தேதி தாவணகரே வடக்கு தொகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு வாக்களிக்க சென்றுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் கிங்மேக்கரா குமாரசுவாமி... ஆபரேசன் கை திட்டத்தில் காங்கிரஸ்... புதிய வியூகத்தில் பாஜக
ஆனால், வாக்காளர் பட்டியலில் ராகவேந்திராவின் பெயர் இல்லை எனக் கூறி தேர்தல் அதிகாரிகள் அவரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. பட்டியலில் பெயர் விடுபட்டு போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் கூட தனது பெயர் பட்டியலில் இருக்கிறதா என ஆன்லைன் மூலம் சரிபார்த்தேன் எனக் கூறும் ராகவேந்திரா, தேர்தலில் வாக்களிக்க ஒரு வாரம் விடுப்பு எடுத்து ஊருக்கு வந்தேன் என்றார். தனது பெயர் விடுபட்டது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறிய அவர், தேர்தல் அதிகாரிகள் உரிய விளக்கம் தர வேண்டும் எனக் கோரியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.