முகப்பு /செய்தி /இந்தியா / திருமணத்தின்போது மாயமான மணமகன்... 20 கிமீ சேஸ் செய்து காதலனை கரம்பிடித்த பெண்.. சுவாரஸ்ய சம்பவம்!

திருமணத்தின்போது மாயமான மணமகன்... 20 கிமீ சேஸ் செய்து காதலனை கரம்பிடித்த பெண்.. சுவாரஸ்ய சம்பவம்!

திருமண நிகழ்வு

திருமண நிகழ்வு

திருமணமத்தன்று தப்பியோடிய மணமகனை 20 கிமீ சேஸ் செய்து பிடித்து திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

திருமணமத்தன்று தப்பியோடிய மணமகனை 20 கிமீ சேஸ் செய்து பிடித்து திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், அருகே உள்ள பதான் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரத்தை இரு வீட்டாருக்கும் தெரிவித்து ஒரு வழியாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்ற ஞாயிறு மே 21ஆம் தேதி அங்குள்ள பூதேஸ்வர்நாத் கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மணமக்கள் இருவரும் தயாராக தொடங்கினர். இந்நிலையில், திருமண நாளன்று காலை மணப்பெண் அனைத்து அலங்காரமும் செய்து மண்டபத்தில் தயாராக இருந்தார். ஆனால், அங்கிருந்த மணமகன் திடீரென மாயமானார்.

மணப்பெண் தனது காதலனுக்காக காத்திருக்கவே, வெகு நேரமாகியும் அவரை காணவில்லை. ஆர்வத்துடன் காத்திருந்த பெண்ணுக்கு கவலை ஏற்படவே, தனது செல்போன் மூலம் போன் செய்து அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் தான் பேருந்தில் இருப்பதாக கூறியுள்ளார். ஏன் எதற்கு என மணப்பெண் கேட்கவே, தனது அம்மாவை அழைத்து வர பேருந்தில் செல்கிறேன் என்றுள்ளார். மணமகனின் பேச்சு மணப்பெண்ணுக்கு சந்தேகத்தை கிளப்பியது.

ஒரு நிமிடம் கூட தாமதிக்கால் அவர் இருப்பிடத்தை கேட்டறிந்த மணக்கோலத்திலேயே அங்கு சென்றுள்ளார். அப்போது தான் மணமகனுக்கு திருமணம் செய்ய குழப்பம் மற்றும் தயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. மாப்பிள்ளையை பேருந்தில் இருந்து இறக்கி திருமணம் நடைபெறும் கோயிலுக்கு அழைத்து வந்தார்.

இதையும் படிங்க: 58 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட மாமியார்... விசித்திரமான புகாரை அளித்த மருமகள்...!

top videos

    பின்னர், மணமகனின் மனதை சரி செய்து தனது ஆசை காதலனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் இந்த களேபரம் நடந்து முடிந்த நிலையில், ஒரு வழியாக மணமக்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணக்கோலத்தில் சற்றும் யோசிக்காமல் பெண் செய்த அதிரடி காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    First published:

    Tags: Love marriage, Marriage, Uttar pradesh, Viral News