முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய சட்ட அமைச்சரின் கார் மீது மோதிய லாரி.... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

மத்திய சட்ட அமைச்சரின் கார் மீது மோதிய லாரி.... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

மத்திய அமைச்சர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது

மத்திய அமைச்சர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

மத்திய கேபினெட் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பாஜகவின் கிரண் ரிஜிஜூ அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அரசில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளார். மாலை ராம்பன் மாவட்டத்தில் அவர் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

நெடுஞ்சாலையில் அவரது கான்வாய் சென்று கொண்டிருந்த நிலையில், அமைச்சரின் கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது மரூக் என்ற பகுதியில் உள்ள சீதா ராம் பாசி என்ற பகுதியில் மாலை 6 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் அமைச்சரின் கார் சேதமடைந்த நிலையில், உடனடியாக அவர் காரில் இருந்து வெளியேறி வேரொரு காரில் அங்கிருந்து பத்திரமாக கிளம்பி சென்றார்.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ராம்பன் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான கருப்பு நிற ஸ்கார்பியோவில் இருந்து அமைச்சர் வெளியேறி பாதுகாவலர்கள் மூலம் வேறு பகுதிக்கு அழைத்து செல்லப்படும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

இதையும் படிங்க: முன்னாள் காதலியை பழிவாங்க திருமண பரிசில் வெடிகுண்டு வைத்த நபர்... புது மாப்பிள்ளை பலியான பகீர் சம்பவம்!

top videos

    விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பகுதியில் நீண்ட நேரம் டிராபிக் நெரிசல் இருந்ததால், சம்பந்தபட்ட லாரி பின்நோக்கி ரிவர்ஸ் எடுத்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அமைச்சரின் கார் மீது மோதி விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    First published:

    Tags: Car accident, Jammu and Kashmir, Kiren Rijiju